சுதந்திர கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்க சதி : எழுந்துள்ள குற்றச்சாட்டு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை (SLFP) ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) இணைப்பதற்கு சிலர் சூழ்ச்சி செய்வதாக சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துஷ்மந்த மித்ரபால (Dushmantha Mithrapala) குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
"ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இது சவால் மிகுந்த வருடம் என்பதோடு இந்த ஆண்டு தேர்தல்களும் நடைபெறவுள்ளன.
கட்சி ஆதரவாளர்கள்
எனவே, சூழ்ச்சிகளுக்கு அடிபணியாது கட்சியை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
சுதந்திரக் கட்சியை யானை வாலுடன் முடிச்சுப் போடுவதற்கு சில குழுக்கள் முற்பட்டாலும் அக்கட்சி ஆதரவாளர்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 22 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
