திருகோணமலையில் ஊரடங்கு நேரத்தில் மதுபோதையில் அட்டகாசம்
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துவரங்காடு மற்றும் அலஸ் தோட்டம் பகுதிகளில் சிலர் வீதியில் மதுபோதையில் அட்டகாசம் செய்து வருவதாகத் தெரியவருகின்றது.
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு இருக்கின்ற நிலையில் யாசகம் எடுப்பவர்கள் இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடி வருவதாகவும், மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்து வருவதையும் காணக்கூடியதாக இருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறிப்பாக யாசகர்கள் உண்பதற்கு உணவின்றி பகல் நேரங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற காலப்பகுதியில் திருகோணமலை பொது வைத்தியசாலை, காளி கோயில், பிரதான பேருந்து தரிப்பிடம் போன்ற இடங்களில் நின்று கொண்டு யாசகம் பெற்று இரவு நேரங்களில் துவரங்காடு மற்றும் அலஸ் தோட்டம் போன்ற பகுதிகளில் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்து வருவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேநேரம் நேற்றிரவு (10) திருகோணமலை - நிலாவெளி பிரதான வீதி துவரங்காடு பகுதியில் மதுபோதையில் வாகனங்களைச் செல்ல விடாமல் நடுவீதியில் நின்றதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam