ஐசிசியின் ஓகஸ்ட் மாத தொடரின் சிறந்த வீரர்களாக இலங்கையர்கள் தெரிவு
2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி (ICC) தொடரின் ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக துனித் வெல்லலகேவும் சிறந்த வீராங்கனையாக ஹர்ஷித சமரவிக்ரமவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான அறிவிப்பை ஐசிசி இன்று (16.09.2024) விடுத்துள்ளது.
ஐசிசியின் 2024ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மாதத்திற்கான தொடரில் இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டு ஒருநாள் தொடரில் துனித் வெல்லலகே சிறப்பாக விளையாடியுள்ளார்.
அரிய வெற்றி
இதற்கமைய, குறித்த தொடரை 2-0 என்ற கணக்கில் அணி வெற்றிபெற காரணமாக இருந்த ஆட்டநாயகன் துனித் வெல்லலகே இந்த விருதை வென்றுள்ளார்.
அதேவேளை, இலங்கை மகளிர் அணியின் ஹர்ஷித சமரவிக்ரம அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் ஊதா நிற பேட்சினை வென்றமையுடன் ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை என்ற விருதையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கைக்கு கிடைத்த ஒரு அரிய வெற்றியாகவே குறித்த இருவரின் சாதனைகளும் பார்க்கப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
