புதிய மின்சக்தி அமைச்சராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்படுவார்!தயாசிறி ஜயசேகர தகவல்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க புதிய மின்சக்தி அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக திஸாநாயக்க அரசாங்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்
இதன்படி திஸாநாயக்க புதிய மின்சக்தி அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக ஜயசேகர தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது அதற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும், திஸாநாயக்க கட்சியின் தீர்மானத்திற்கு எதிராகச் சென்று வரவு
செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri