துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை ரத்து செய்யுமாறு கோரிக்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை ரத்து செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி எராஜ் டி சில்வா ஆகியோர் உள்ளிட்ட சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்விற்கு பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.

சட்டவிரோதமாக வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு
ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படும் நடைமுறைகளை பின்பற்றாது கோட்டாபய ராஜபக்ச, துமிந்தவிற்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த பொதுமன்னிப்பு வழங்குதல் சட்டவிரோதமானது என நேற்றைய தினம் நீதிமன்றில் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் அமைப்பினை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 20ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri