துமிந்த சில்வா தொடர்ந்தும் சிறையில் இருக்க வேண்டிய நபர் அல்ல: முருத்தெட்டுவே தேரர்
துமிந்த சில்வா என்பவர் மக்கள் பிரதிநிதியாக சமூகத்திற்காகவும் குறிப்பாக வறிய மக்களுக்காகவும் பாரிய பணிகளை செய்த நபர் என்பதால், அவர் தொடர்ந்தும் சிறையில் இருக்க வேண்டியவர் அல்ல என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இதனால், துமிந்த சில்வா தொடர்பாக ஏதேனும் நடைமுறையயை கையாள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அரசாங்கமும், சிறைச்சாலைகள் திணைக்களமும் கவனம் செலுத்த வேணடும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நடந்த தவறுகள் சம்பந்தமாக ஆராய்ந்து நீதியை நிறைவேற்றுவதாக தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது.
இதனடிப்படையில் துமிந்த சில்வாவுக்கு நியாயம் நிறைவேற்றப்பட வேண்டும். சகல உயிர்களும் சுகமாய் வாழ பிரார்த்திப்போம் என்ற புத்தரின் போதனைக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.சிங்கள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri