தனது அரசியல் மீள் பிரவேசம் தொடர்பில் துமிந்த சில்வா கூறியுள்ள விடயம்
எதிர்காலத்தில் தான் அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்பது தனக்கு தெரியாது என வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வா (Duminda Silva) தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற வீடமைப்புத் திட்டம் தொடர்பான வேலைத்திட்டத்தின் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
அர்ப்பணிப்புடன் வேலை செய்வதால், வீடமைப்பு அதிகார சபை என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. வீடமைப்பு அதிகார சபை தற்போது சிறந்த நிறுவனமாக மாறியுள்ளது.
எதிர்காலத்தில் 70 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் துமிந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் பிரேமச்சந்திர (Bharatha Lakshman Premachandra) கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட பின்னர் அரசாங்கம் அவருக்கு வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri