துமிந்த நாகமுவவுக்கு பிடியாணை, பாடசாலைகளுக்கு செல்ல அரசியல்வாதிக்கு தடை
முன்னிலை சோசலிஸக்கட்சியின் தேசிய அமைப்பாளா் துமிந்த நாகமுவ உட்பட்ட ஐந்து பேரை கைதுசெய்ய கடுவெல நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஆா்ப்பாட்டம் ஒன்றின்போது கடுவெல நீதிமன்றத்தை அவமதித்தமை மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மெதிாிகம பாடசாலை ஆசிாியா்களின் போராட்டத்தின் போது அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் கேகாலை - மாவனல்ல பிரதேசசபையின் பிரதி தவிசாளா் உட்பட்ட மூவரை, தலா ஒரு லட்சம் ரூபா சொந்தப்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
அத்துடன் மாவனல்ல பகுதியின் எந்தவொரு பாடசாலைக்கும் செல்வதற்கு அவா்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இவா்கள் மூவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டனா்.

பதினாறாவது மே பதினெட்டு 19 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
