சீனாவில் கோவிட் தொற்று பரவலால் இணைய வழி வகுப்புக்கள் நடத்த உத்தரவு
சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் கோவிட் தொற்றுக்கள் அதிகரித்து வருவதால், பெரும்பாலான பாடசாலைகளில் இணையம் மூலமாக வகுப்புகளை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
ஷாங்காயின் கல்வி பணியக தகவல்படி, முன்பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் மூடப்படும். நாட்டின் கோவிட் பரிசோதனை மற்றும் அறிக்கையிடல் அமைப்புகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள், வைரஸ் எவ்வளவு பரவலாக மாறியுள்ளது என்பதை அறிந்துகொள்வது கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாடு முழுவதும் தற்காலிக சுகாதார மையங்கள் மற்றும் தீவிர சிகிச்சை வசதிகள் மூலம் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
கோவிட் தடுப்பு நடவடிக்கைகள்
ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், நகரத்தில் உள்ள சில பாடசாலைகள் ஏற்கனவே நேரடி வகுப்புகளை நிறுத்தியுள்ளன.
தற்போதைய கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிட்டுள்ளார்.