இலங்கை கோடீஸ்வர வர்த்தகர் கொள்வனவு செய்யும் அதிசொகுசு ஜெட் விமானம்
இலங்கையின் பிரபல தொழிலதிபர் டட்லி சிறிசேன உலகின் மிகவும் பிரபலமான நடுத்தர அளவிலான வணிக ஜெட் விமானங்களில் ஒன்றான செஸ்னா சைட்டேஷன் லேட்டிட்யூட்டை கொள்வனவு செய்வதில் அவதானத்தை செலுத்தியுள்ளார்.
சமீபத்திய சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் நடந்த கலந்துரையாடல்களை தொடர்ந்து, இந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அறை வசதியுடன் கூடிய கேபினுடன் ஒன்பது பயணிகள் வரை வசதியாக அமரக்கூடிய இந்த வணிக ஜெட், இரட்டை பிராட் மற்றும் விட்னி PW306D1 இயந்திரங்களால் இயக்கப்படுகிறது.
ஜெட் விமானம்
இது மணிக்கு சுமார் 825 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியும். அதிகபட்சமாக சுமார் 2,700 கடல் மைல்கள் செல்லக்கூடியது.

இந்த ஜெட் விமானம், நியூயோர்க் முதல் லொஸ் ஏஞ்சல்ஸ் வரை இடைவிடாமல் பறக்கும் திறன் கொண்டது.
இந்த விமானம் அமெரிக்காவின் கன்சாஸின் விச்சிட்டாவை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய விமானப் போக்குவரத்துத் தலைவரான டெக்ஸ்ட்ரான் ஏவியேஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
சிறப்பு அம்சங்கள்
2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, 400 க்கும் மேற்பட்ட விமானங்கள் உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விமானமும் அதன் அம்சங்களைப் பொறுத்து 20 மில்லியன் அமெரிக்க முதல் 22 மில்லியன் மில்லியன் அமெரிக்க வரை செலவாகும்.
அதன் செஸ்னா மற்றும் Beechcraft தயாரிப்புகளின் கீழ், 170 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 250,000 க்கும் மேற்பட்ட விமானங்களை தயாரித்து வழங்கியுள்ளது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 20 மணி நேரம் முன்
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam