இலங்கையில் தேடப்படும் ஆபத்தான நபர் விடுவிப்பு - டுபாயில் பாரிய விருந்து கொண்டாட்டம்
டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமாரா என்ற கொண்டா ரஞ்சித்தை அந்நாட்டு பொலிஸார் விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இருந்து சட்டத்தரணிகள் குழு, சந்தேக நபரை விடுவிப்பதற்காக டுபாய் சென்றுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கோண்டா ரஞ்சி இதற்காக சுமார் 250 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் புலனாய்வு அமைப்புகளுக்கு தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடையவர்
சந்தேக நபர் விடுவிக்கப்பட்ட பின்னர் பாரிய விருந்து வைக்கப்பட்டதுடன் அதன் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

கோண்டா ரஞ்சி சமீபத்தில் இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்றபோது டுபாயில் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் கில்லாடி ஜோடிஸ் நடன நிகழ்ச்சி... யார் யார் போட்டியாளர்கள், வீடியோ இதோ Cineulagam