சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளித்துள்ள துபாய்
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், நைஜீரியா, மற்றும் உகண்டா ஆகிய நாடுகளால் வழங்கப்பட்ட கடவுச் சீட்டுக்களைக் கொண்டவர்கள், சுற்றுலா விசாவுடன் துபாய்க்குள் நுழையலாம் என ஃப்ளை துபாய் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
தமது வானூர்திகளில் பயணிப்போரின் பி.சி.ஆர் சோதனை தேவை, புறப்படும் நாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று ஃப்ளை துபாய் தெரிவித்துள்ளது.
பயணிகள், புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனையின் அச்சிடப்பட்ட நகலைக் கொண்டிருக்க வேண்டும்.
வானூர்திக்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பும், துபாய் சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு வந்த பிறகும் பயணிகள் விரைவான பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் ஃப்ளை துபாய் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இராஜதந்திர, பொருளாதார மற்றும் விஞ்ஞானப் பணியாளர்கள், ஐக்கிய அரபு இராச்சியத்தின் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் பயணிகளுக்கு, இந்த நிபந்தனைகளில் விலக்கு அளிக்கப்படுவதாக ஃப்ளைதுபாய் அறிவித்துள்ளது.





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan
