இரட்டைக் குடியுரிமை எனக்கு இல்லை: முதல் உரையில் எம்.பி. கடும் விசனம்
தனக்கு இரட்டைக் குடியுரிமை இருப்பதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய எம்.பி. நயன வாசலதிலக கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி பதவி விலகியதை அடுத்து, அவரது வெற்றிடத்துக்கு நயன வாசலதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று அவர் தனது முதல் உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியுள்ளார்.
கருத்துக்கள் ஆதாரமற்றவை
இதன்போது தான் இரட்டைப் பிரஜா உரிமை கொண்டவர் என்பதாக வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் அவர் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
எனக்கு இரட்டைப் பிரஜா உரிமை இருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அடிப்படை ஆதாரமற்றவை. இலங்கையின் கடவுச்சீட்டு மாத்திரமே என்னிடம் உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு அரசியலுக்கு பிரவேசித்த நான் என்னால் முடிந்த மட்டிலும் இதுவரை பதுளை மக்களுக்காக சேவையாற்றி வந்துள்ளேன் என்றும் நயன வாசலதிலக எம்.பி. தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
