வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மக்களுக்கு சீன அரசாங்கம் வழங்கிய உதவி
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை (Trincomalee) மாவட்ட மக்களுக்கு, மக்கள் சீன (China) குடியரசு அளித்த, நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிகழ்வு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இன்று (29), மாவட்ட செயலாளர்கள் நடைபெற்றது.
சீன அரசாங்கத்தின் சகோதர பாசம் என்ற தொனிப் பொருளின் கீழ், இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது.
சீன - இலங்கை உறவு
இதன் முதற்கட்டமாக இன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா, மூதூர் மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்களுக்கு 700 பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதனை, மக்கள் சீன குடியரசின் இலங்கைக்கான தூதுவர் H. E. கிய் சேன்ஹொங் (H. E. Qi Zhenhong) பிரதமாக அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
இதன்போது, மக்கள் சீன குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கருத்து தெரிவிக்கையில், இங்குள்ள மக்களையும் அரச அதிகாரிகளையும் எங்களுடன் இணைத்துக் கொள்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
கொவிட்-19 காலத்தில் சீன பார்ம் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்கு வழங்கி உதவிகளை செய்தோம். கிழக்கு மாகாணத்துக்கு 2475 மில்லியன் ரூபா பெறுமதியான வெள்ள நிவாரணம், உதவியாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாங்கள் திருகோணமலைக்கு வந்த போது கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்துக்காக 8 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தோம் என்று தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |