மதுபோதையில் இளைஞர் குழு அட்டகாசம் - நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் மதுபோதையில் சென்றவர்கள் தாக்கியதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் மதுபோதையில் நின்றிருந்த ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடாத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பெண் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை ஈச்சங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்போது குறித்த பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வவுனியா பிராந்திய ஊடகவியலாளர் கோபாலகிருஸ்ணன் ரூபகாந் மீதும் குறித்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் காயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
