யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சாரதி.. பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி, மதுபோதையில் டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதியால் சுமார் 10 தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமாக்கியுள்ளன.
தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமானதால், அப்பகுதிக்கான தொலைத்தொடர்பு சேவை தடைப்பட்டுள்ளது.
அத்துடன், தப்பியோடிய டிப்பர் வாகனம் வீதிகளில் மணலை கொட்டியுள்ளமையால், வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மெலுதெரியவருவதாவது, கொடிகாம பொலிஸார் இன்றைய தினம் (29) அதிகாலை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
தப்பியோடிய சாரதி..
அதன்போது, கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் மறித்த வேளை, பொலிஸாரின் கட்டளையை மீறி டிப்பர் வாகனத்தை அதன் சாரதிகள் செலுத்தி தப்பியோடியுள்ளார்.

டிப்பர் வாகனத்ததை செலுத்திக் கொண்டு தப்பியோடிய நிலைய பொலிஸார் துரத்தி சென்ற வேளை, டிப்பரில் இருந்த மணலை வீதியில் பறித்த வண்ணம் தப்பியோடினார்.
அதன்போது தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியதில், அதன் வயர்கள் டிப்பர் வாகனத்தில் கொளுவிய நிலையில் டிப்பர் தொடர்ந்து பயணித்தமையால், சுமார் 10 கம்பங்கள் முறிந்து சேதமாகியுள்ளன.
இந்நிலையில் தப்பியோடிய டிப்பர் வாகனத்தை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளதுடன், பளை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய சாரதியையும், உதவியாளரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்த வேளை, சாரதி மதுபோதையில் இருந்தமையும் உறுதி செய்துள்ளனர்.
அதேவேளை குறித்த சம்பவத்தில், சேதமடைந்த தொலைத்தொடர்பு கம்பங்களை மாற்றி தொலைத்தொடர்பு சேவையை மீள வழங்க பணியாளர்கள் புனரமைப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பில் கொடூரமாக கொலை செய்து புதைக்கப்பட்ட நடன கலைஞர்! நண்பர்கள் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலங்கள்