மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள்: பொலிஸார் நடவடிக்கை
வவுனியாவில் (Vavuniya) மதுபோதையில் வாகனம் செலுத்தியதன் குற்றச்சாட்டில் இரு சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றிரவு (03.05.2024) வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை தடுப்பதற்காக விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
இதன்போது, மதுபோதையில் பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய இரு வாகனங்களை செலுத்திய சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த இரு வாகனங்களும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவும் பொலிஸாரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam