யாழில் மருத்துவரின் காரிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் - செய்திகளின் தொகுப்பு (video)
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் மருத்துவர் என்பதைக் குறிக்கும் அடையாளம் பொறிக்கப்பட்ட காரிலிருந்து ஒரு கிராம் 30 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காரில் பயணம் செய்த 26 மற்றும் 27 வயதுடைய இளைஞர்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், மருத்துவர் என்பதை குறிக்கும் காரை வழிமறித்து ஆவண சோதனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,