மித்தெனிய ஐஸ் இரசாயனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட விபரங்கள்
மித்தெனிய பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கான இரசாயனங்களை கொண்டு வந்த கொள்கலன், தொடர்பான விரிவான சுங்க ஆவணங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
அது தொடர்பான விபரங்கள் ஈரானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட டெல்க் மற்றும் டெல்க் பவுடர் சரக்குக்கான கட்டணம் ஜனவரி 9ஆம் திகதி செலுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.
இந்தப் பொருட்கள் டிசம்பர் 20, 2024 அன்று ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளன.
இறக்குமதி வரி
மொரட்டுவ கோரலவெல்லவில் அமைந்துள்ள ஒரு நிறுவனம், ‘XIN HANG ZHOU’ என்ற கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தப் பொருட்களின் இறக்குமதியாளராகப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் பொருட்கள் ஈரானின் ‘‘Afshan Tarabar Barsava Co’ நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்கள் இரு வகைகளை உள்ளடக்கியது. அதில் ஒன்று 37,500 கிலோகிராம் (37.5 மெட்ரிக் டன்) நிறை கொண்ட செமி பொஸ்பேட் டெல்க் கற்கள்(Semi Processed Talc Stones) ஆகும். மற்றையது (Talc Stone Powder) 11,500 கிலோகிராம் (11.5 மெட்ரிக் டன்) டால்க் கல் தூள்.
இந்த இறக்குமதிக்காக மொத்தம் 522,718 இலங்கை ரூபாய் வரி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
