தெற்கில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்.. பிரதி பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்
போதைப்பொருள் மற்றும் பாதாள குழு செயற்பாடுகளுக்கு பெயர் பெற்ற இடம்தான் தென்பகுதி. சுற்றுலா பணயத் தொழிற்துறையில் வெளிநாட்டவர்களின் தொடர்பில் போதைப்பொருள் இராச்சியம் ஆக்கப்படிருப்பதாக தென்பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரான கித்சிறி ஜயலத் தெரிவித்துள்ளார்.
தென்பகுதியில் தலை விரித்தாடும் போதை, பாதாள குழுச் செயற்பாடுகள் தொடர்பில் அவர் கூறிய கருத்துக்கள் இலங்கையில் பாதாள குழுச் செயற்பாடுகள் அதிகமாக நடைபெறும் பகுதிகளாக தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணம் காணப்படுவதை காட்டுகின்றது.

உனாகூறுவே சாந்த- கொஸ்கொட சுஜீ- ரத்கம விதுர - கரந்தெனிய சுந்தா அண்மையில் டுபாய் லொக்கா - தெய்பாலே அவரின் தம்பி களுமல்லி ஆகியோர் தென்பகுதியில் பாரியளவில் போதைப்பொருள் சம்பந்தமாக தேடப்படுபவர்களாவர். தென் பகுதியில் 1300 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு 258 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் முடிவில்லாமல் தொடர்கிறது.
கடலில் பரிமாறப்படும போதை
தென் பகுதியில் அதிகமான கடற்தொழில் துறைமுகங்கள் காணப்படுகின்றன. மேலும் ஆழ்கடல் கடற்தொழில் படகுகள் மற்றும் சாதாரண படகுகள் அதிகளவு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தென் பகுதி கடலின் கடைசி பகுதியில் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் பார்த்தால் சர்வதேச கப்பல் தொடர்ச்சியாக செல்வதை காண முடியும். வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் போதைப்பொருள்கள் கப்பல்களில் இருந்து கடலில் போடப்படும்.

அவை ஆழ்கடல் கடற்தொழில் படகுகளில் எடுத்து வரப்பட்டு இடையில் டிங்கி படகுகளில் கரைக்கு கொண்டு வரப்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
மேலும் தங்காலை பொலிஸார் இரவு முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அதனால் முன்பை விட இன்று போதைப்பொருள் கடத்துவது இலேசான காரியமல்ல.
முன்நடவடிக்கை
ஒரு சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் அதை தடுக்கும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுவர். அவை சமூகத்திற்கு வெளிப்படையாக தெரியவதில்லை. நடந்த சம்பவங்களே பேசப்படும்.
அண்மையில் தொடர்ச்சியாக நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பங்களை எடுத்துக் கொண்டால் எமது நடவடிக்கையால் குறைந்துள்ளது. அவ்வாறு இல்லையென்றால் அதிக மரணங்களும் படுகாயங்களும் ஏற்பட்டிருக்கும்.
வரலாற்று பதிவு
எனது 33 வருட பொலிஸ் சேவைக் காலத்தில் போதைப்பொருள் மற்றும் பாதாள குழுச்செயற்பாடுகளை ஒழித்துக் கட்ட எமக்கு தற்போது கிடைத்திருக்கும் தலைமைத்துவம் வேறு எந்த அரசிலும் கிடைக்கவில்லை.
வெளிநாடுகளில் ஒளிந்திருக்கும் பாதாள குழுத் தலைவர்கள் எதிர்காலத்தில் நாட்டுக்கு கொண்டு வரப்படுவர். பாதாள குழுவினர் இனியும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு தங்களின் செயற்பாடுகளை மேற்கொள்ள நினைப்பார்களானால், அது முடியாத காரியமாகும்.
ஏனென்றால் பொலிஸ் மா அதிபரினால் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது.
வெளிநாட்டிலிருந்து செயற்படும் கும்பல்
டுபாயிலோ அல்லது வேறு எந்த நாட்டில் இருக்கும் பாதாள குழுவினருக்கு உள்நாட்டில் உதவி செய்பவர்கள் தேவை. துப்பாக்கிதாரி உள்ளுராகவே இருக்க வேண்டும். மேலும் இலங்கையில் அவர்களின் வேலைகளை செயவதற்கு ஒரு ஏஜன்ட் தேவை. அந்த வலையமைப்பை ஆராய்ந்து வருகிறோம்.
எமக்கு வலுவான புலனாய்வு துறை இருக்கிறது. அத்தோடு மாவட்ட ரீதியில் குற்றங்கள் விசாரணைப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலி- மாத்தறையில் இவை அமைக்கப்பட்டுள்ளது.
அதனுடாக அவர்களின் செயற்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது. வெளியில் இருந்து ஏதும் தகவல்கள் வந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனால் அவர்களுக்கு உடன் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளது.
தொழில்நுட்ப பயன்பாடு
குற்றங்கள் புரிவதற்கு தொழில்நுட்பங்கள் வாய்ப்பாக அமைவது போல் குற்றவாளிகளை பிடிப்பதற்கும் பயன்படுகிறது. தென் மாகாணத்தில் குடு விற்பதற்கும் லோகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

எம்மிடம் சைபர் கிரைம் பிரிவு இருக்கிறது. அதில் திறமையான பல அதிகாரிகள் இருக்கின்றனர். அண்மையில் நடந்த வெலிகம சூட்டு சம்பவத்தின் குற்றவாளிகளை பிடிக்க சைபர் கிரைம் பிரிவுடன் இணைந்த மேற்கொண்ட நடவடிக்கையிலேயே அவர்கள் பிடிபட்டனர்.
வெலிகம பகுதியில் போதை பொருள் தயாரிப்பு நிலையம் ஒன்றை சுற்றிவலைத்து கைப்பற்றிய போதை பொருளை ஐஸ் என்றே சினைத்தோம்.ஆனால் ஐஸ் இற்கும் மேலான பயங்கர போதை பொருளாகும்.
இது ரஷ்யாவில் பாவிக்கப்படுகிறது. பெலருஸை சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவன் ரஷ்யாவிலுள்ள ஒருவரிடம் தொலைபேசியில் காணொளி தொடர்பை ஏற்படுத்தி இதை தயாரித்துள்ளார். இது எமது புலனாய்வு தகவல்களில் தான் பிடிப்பட்டது. இது பிடிப்படாவிட்டால் மாபெரும் அழிவை சந்திருக்கும்.
ஐஸ் போதையை ஒரு முறை பயன்படுத்தினால் அதிலிருந்து மீள முடியாது. ஒரு வீட்டில் ஒருவர் இருந்தால் போதும் முழு குடும்பமும் நாசம்.அதனால் அதை ஒழிப்பதில் நாம் முழு மூச்சாக செயற்படுவோம்“ என்றார்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        