கைப்பற்றப்படும் போதை பொருட்கள்: நீதிபதிகளுக்கு பறந்த அவசர கடிதம்
நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்படும் போதைப்பொருட்கள் குறித்த முழுமையான அறிக்கைகளை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அறிவித்துள்ளார்.
‘அழிக்கப்பட்ட அபாயகர ஒளடதங்கள் குறித்த வருடாந்திர அறிக்கைகளைப் பெறுதல்’ என்ற தலைப்பின் கீழ் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கும் இது தொடர்பான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அழிக்கப்படும் போதை பொருட்கள்
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த மாதிரியும் கடிதத்தில் வழங்கப்பட்டுள்ளது.
படிவத்தின்படி, தொடர்புடைய வழக்கு எண், அழிக்கப்படும் மருந்தின் வகை மற்றும் அழிக்கப்படும் அளவு ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.

அபாயகர ஒளடதங்கள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வரும் அனைத்து பொருட்களும் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும்.
இந்த அறிக்கை ஒவ்வொரு ஆண்டின் இறுதியில், டிசம்பர் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.