கொள்கலனில் பிடிப்பட்ட ஐஸ்: திடுக்கிட வைக்கும் பல தகவல்கள்

CID - Sri Lanka Police Port of Colombo Crime Drugs
By Kanthan Sep 01, 2026 07:18 AM GMT
Report

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 463 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் இலங்கையை இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குத் துவாய்களுக்கு நடுவே மறைத்து இவை கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கையில் இவற்றை வெளியிலெடுக்க முயன்றபோது சுங்கப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் கடும் கண்காணிப்பு காரணமாக வெளியிலெடுக்க முடியாமல் போயிருக்கலாம்.

இதனால் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் அவசர அவசரமாக நிறுவனங்களின் பெயர்களை மாற்றி கெமரூன் நாட்டிற்கு மறு ஏற்றுமதி செய்வது போல ஆவணங்களைத் தயாரித்திருக்கலாம்.

பொலிஸார் சந்தேகம்

எனவே இது பாகிஸ்தானிலிருந்து கெமரூன் செல்ல வந்த சரக்கு என்பதை நம்ப முடியாது. இது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருளாகவே இருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பாகிஸ்தானில் சமர்ப்பிக்கப்பட்ட மூல ஆவணங்களை பரிசீலித்தால் மட்டுமே இதன் பின்னணியில் உள்ள உண்மையான கடத்தல்காரர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியும். இன்னமும் இதன் எடையை அளவிடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கொள்கலனில் பிடிப்பட்ட ஐஸ்: திடுக்கிட வைக்கும் பல தகவல்கள் | Drugs

சுமார் 463 கிலோகிராம் எடைகொண்ட 46 பொதிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் முழுமையாக அளவிட்ட பின்னரே இறுதி எடை தெரியவரும். எது எப்படியிருப்பினும்இ இது மிகவும் பாரதூரமான சம்பவமாகும்.

காரணம் கடந்த காலத்தில் கடல் வழியாக இலங்கைக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் பெருமளவில் கொண்டுவரப்படுவது தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

அமெரிக்கா-ஈரான் பதற்றநிலை மற்றும் வெளிநாடுகளில் இருந்த முக்கிய குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டமை போன்ற காரணங்களால் தெற்கு பகுதி ஊடாக இலங்கைக்குப் பெருமளவில் போதைப்பொருட்கள் வருவது நிறுத்தப்பட்டிருந்தது.

இரகசியத் தகவல்

ஆனால் மீண்டும் பழையபடி கொள்கலன்கள் மூலமாக நாட்டிற்குள் போதைப்பொருள் வருகிறதா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கமையவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த இரண்டு கொள்கலன்கள் குறித்து இரகசியத் தகவல் கிடைத்தது.

பின்னர் கடந்த ஜூன் மாதமளவில் இந்தத் தகவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர் இந்த இரண்டு கொள்கலன்களும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

கொள்கலனில் பிடிப்பட்ட ஐஸ்: திடுக்கிட வைக்கும் பல தகவல்கள் | Drugs

நீதிமன்ற உத்தரவைப் பெற்றே இவை திறக்கப்படவிருந்தன. நீதிமன்றத்திற்கு விபரங்கள் அறிக்கையிடப்பட்டு பௌர்ணமி தினத்தை ஒட்டிய காலப்பகுதியில் இவற்றைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதனிடையே பொலிஸ் விசாரணைகளின் போது ஒருங்கிணைந்து செயல்படாமையின் விளைவுகளைச் சில நேரங்களில் சந்திக்க வேண்டியேற்படுகிறது. இந்த நிலையில் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு மீண்டும் ஒரு தகவல் கிடைக்கிறது.

அவர் உடனடியாகச் செயற்பட்டு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்குத் தெரிவித்து நீதிமன்ற உத்தரவைப் பெற்று நேற்று இந்த இரண்டு கொள்கலன்களையும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

விசாரணை

ஆவணங்களைப் பரிசீலித்தபோது இந்தச் சரக்கு பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்து இங்கிருந்து கெமரூன் (Cameroon) நாட்டிற்கு (மத்திய ஆப்பிரிக்க நாடு) மறு ஏற்றுமதி (Re-export) செய்யப்படவிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பாகிஸ்தானிலிருந்து கெமரூன் செல்வதற்கு இலங்கையினூடாக இவ்வளவு நீண்ட தூரம் சுற்றி அனுப்ப வேண்டிய  அவசியம் என்ன, கெமரூன் நாட்டிற்கு தெற்காசியாவிலிருந்தா அல்லது பாகிஸ்தானிலிருந்தா ஐஸ் போதைப்பொருள் விநியோகிக்கப்படுகிறது.

கொள்கலனில் பிடிப்பட்ட ஐஸ்: திடுக்கிட வைக்கும் பல தகவல்கள் | Drugs

இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தபோது கெமரூன் நாட்டிற்கு 'மெத்தாம்பெட்டமைன்' (ஐஸ்) போதைப்பொருள் முக்கியமாக அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

மேலும் கெமரூன் நாட்டிற்குள் இருக்கும் இரசாயனக் கூடங்களிலேயே ஐஸ் தயாரிக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. குறிப்பாக கெமரூனில் ஐஸ் போதைப்பொருளை விட 'கொக்கைன்' பயன்பாடே அதிகம்.

அது கொலம்பியா - பெரு - பொலிவியா போன்ற நாடுகளிலிருந்து வருகிறது. ஆவணங்கள் தொடர்பான ஆழமான விசாரணையின் போதே முழுமையான விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும். 

நான்கு மணி நேரம் வாக்குமூலம்! CCIDயிலிருந்து வெளியேறிய தனசிறி அமரதுங்க

நான்கு மணி நேரம் வாக்குமூலம்! CCIDயிலிருந்து வெளியேறிய தனசிறி அமரதுங்க

22 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணை! 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

22 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணை! 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US