திருகோணமலையில் அதிகரித்துள்ள போதை பொருள் பாவனைக்கெதிராக விசேட செயலமர்வு(Video)
திருகோணமலையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் இன்று (25.08.2023) உப்புவெளி பிரதேசத்தில் இளம் தலைமுறையினருக்கு மனித உரிமை சார் விடயங்களில் வலுவூட்டல் தொடர்பிலான பயிற்சி நெறியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச உரிமைகள் பற்றி தெரிந்து கொண்டால் மாத்திரமே கிராம மட்டத்தில் சேவையாற்ற முடியும் எனவும் இளைஞர்களாகிய நீங்கள் அதனை தெரிந்து கொண்டால் மாத்திரமே சமூகத்தில் சேவையாற்ற முடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மனித உரிமை தொடர்பான பயிற்சி நெறி
தற்போது மாவட்டத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளது இதற்கு முக்கிய காரணம் போதைப்பொருள் பாவனை அதிகரித்தமையே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை கருத்தில் கொண்டே மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளை தேர்ந்தெடுத்து மனித உரிமைகள் தொடர்பாகவும், போதை பொருள் பாவணையை தடுப்பது குறித்தும் பயிற்சிகளை வழங்கி வருகின்றோம்.
நீங்கள் அனைவரும் இதன் மூலம் பயிற்சி பெற்று சிறந்த சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டுமெனவும் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிகழ்வில் திருகோணமலை- மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த
ஹெட்டியாராச்சி,சட்டமா அதிபர் திணைக்கள சட்டவாதி மாதினி விக்னேஷ்வரன், மனித
உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இசதீன், அகம் மனிதாபிமான
வள நிலையத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராஷா, கிழக்கு மாகாண சிவில்
அமையத்தின் பிரதி இணைப்பாளர் ராசு ரமேஷ் ஆகியோர் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.






