யாழில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை: நால்வர் கைது (Photo)
யாழ். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின்
போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இன்றைய தினம் (08.11.2022) குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 30 வயதுக்குட்பட்ட நால்வரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 126 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். அரியாலை
இதேவேளை யாழ். அரியாலை - பூம்புகார் பகுதியில் மூன்று மூட்டைகளாக்கப்பட்ட நிலையில் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவமும் இன்றைய தினமே (08.11.2022) பதிவாகியுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஆகியோரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 80 கிலோகிராமிற்கும் மேற்பட்ட எடையுடைய கஞ்சா மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
பூம்புகார் கடற்கரையோரத்தில் இருந்து குறித்த கஞ்சா மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. எனினும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை.
மீட்கப்பட்ட கஞ்சா தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் யாழ். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




