பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட பெண் உள்ளிட்ட ஐவர் கைது
சேதுவத்தை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய திடீர் சோதனையில் போலி துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்றை கொள்ளையடிப்பதற்காக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்த நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடிக்க தயாராக இருந்த முச்சக்கரவண்டியில் சுமார் ஒரு கோடி ரூபாயுடன் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
மேலும், கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் போலி இராணுவ உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள் மற்றும் உத்தியோகபூர்வ அரச இலட்சினைகள், பல்வேறு பாதுகாப்புத் திணைக்களங்களின் சீருடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பன காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய முச்சக்கர வண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பெண் ஒருவரும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
06 கிராம் 497 மில்லிகிராம் ஹெரோயினுடன், ஒரு கோடி ரூபா பணமும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் உட்பட 6 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 20 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
ரஷ்யத் தளபதியைக் கொல்ல 500,000 டொலர் செலவிட்ட புடின் நிர்வாகம்: பின்னர் நடந்த திடுக்கிடும் திருப்பம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam