அமெரிக்கா- இலங்கைக்கு இடையில் போதைப்பொருள் கடத்தல்?
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் குஷ் என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி விமான அஞ்சல் மூலம் காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 1150 கிராம் போதைப்பொருள் சுங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கப்பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்ரிய இதுதொடர்பாக கருத்து வெளிடுகையில்,
விமான அஞ்சல் மூலம் ஐந்து பார்சல்களில் போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ .8 மில்லியனுக்கும் அதிகமாகும்.
இந்த போதைப்பொருள் சுங்கத்திணைக்களத்திற்கு சொந்தமான களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டன.
பார்சல்களின் உரிமையாளர்கள் அதை எடுப்பதற்கு வராமையினால் சுங்க அதிகாரிகள் அதன் முகவரிகள் குறித்து விசாரணைகளைத் தொடங்கினர்.
இருப்பினும் பார்சல்களில் உள்ள முகவரி போலி முகவரி என உறுதிசெய்யப்பட்டவுடன் குறித்த பார்சல்கள் சுங்க அதிகாரிகளால் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பார்சல்களில் குஷ் என்ற போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 17 மணி நேரம் முன்

நீட் தேர்வில் 99.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்த மாணவி யார்? இவரின் வெற்றிக்கான ரகசியம் News Lankasri
