பெண் போதைப்பொருள் கடத்தல்காரரின் சுமார் 30 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கொழும்பு - 14 பகுதியைச் சேர்ந்த பெண் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்குச் சொந்தமான 300 மில்லியன் (30 கோடி) ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முடக்கியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு இந்தச் சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்து இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சொத்துக்கள் முடக்கம்
மேற்படி சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் பெருமளவு சொத்துக்களைச் சேர்த்துள்ளார் என்று கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவுக்கமைய இந்தச் சொத்துக்கள் முடக்கப்பட்டன.
முடக்கப்பட்ட சொத்துக்களின் விவரங்கள் வருமாறு:- கொழும்பு 14 மற்றும் ஜா - எல பகுதிகளில் அமைந்துள்ள சொகுசு வீடுகள். நான்கு கடைத் தொகுதிகள் மற்றும் பெறுமதிமிக்க காணிகள். 59 இலட்சம் (5.9 மில்லியன்) ரூபா பணம் வைப்பிலிடப்பட்டிருந்த ஆறு வங்கிக் கணக்குகள்.
மேலதிக விசாரணை
மேலதிக விசாரணைகளின் போது, வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் 30 மில்லியன் (3 கோடி) ரூபா பெறுமதியான மற்றொரு சொகுசு வீடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டை 2026 மார்ச் 20 முதல் ஏழு நாள்களுக்கு முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான பெண்ணின் ஏனைய சொத்துக்கள் மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து பெண் மீட்கப்பட்ட சம்பவம்: வேலையின்றி சொத்து சேர்த்துள்ள சந்தேகநபர்களின் உறவினர்கள்..!
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam