மனம் திருந்தும் போதைப் பொருள் வார்த்தகர்கள்: அரசாங்கம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
மத்திய கிழக்கு நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் வர்த்தகர்கள் பலர் மனம் திருந்தி புதிய வாழ்க்கையை தொடர விரும்புவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தொலைபேசி அழைப்புகள்
துபாயில் வசித்து வரும் ஏழு போதை பொருள் வர்த்தகர்கள் இவ்வாறு தொலைபேசி அழைப்புகள் மூலம் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகத்தில் இருந்து விலகி நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு தமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு அவர்கள் கோரியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய வாழ்க்கை
மேலும் இவ்வாறு மனந்திருந்தி குற்றச்செயல்களில் செயல்களை கைவிட்டு சமூகத்தில் நட்பிரஜைகளாக வாழ்வதற்கு பல குற்ற கும்பல்களை சேர்ந்தவர்கள் விரும்புவதாக தொடர்பு ஏற்படுத்தியவர்கள் கூறியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம் சரணடைந்து புதிய வாழ்க்கையை தொடர விரும்புவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான கோணத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தும் எனவும் தற்போதைக்கு அரசாங்கம் எவ்வாறான இறுதி தீர்மானம் எடுக்கும் என்பது குறித்து கருத்துக்களை வெளியிட முடியாது எனவும் அமைச்சர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan