போதைப்பொருள் கடத்தல்காரரின் பிறந்தநாளை கொழும்பில் கொண்டாடிய ஆதரவாளர்கள்
வெளிநாட்டில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வனாத்தே “பரை சுதா” என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் பிறந்தநாள் விருந்தே இவ்வாறு கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
தனது பிறந்தநாளுக்காக கொழும்பில் உள்ள ஒரு கலியாட்ட விடுதியில் ஏற்பாடு செய்த விருந்துக்கு, இருநூறுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை அழைத்துள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மில்லியனுக்கும் அதிகமான செலவு
இந்த விருந்துக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.
கொழும்பில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து இந்த விருந்துக்கு வந்துள்ளனர். பெண்களுக்கு முன்கூட்டியே புடவைகள் வழங்கப்பட்டதாகவும், ஆண்களுக்கும் உடைகள் வழங்கப்பட்டதாகவும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விருந்து கடந்த வார இறுதியில் இரவில் நடைபெற்றுள்ளது.
போதைப்பொருள் மூலம் சம்பாதித்த கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க குறித்த சந்தேகநபரால் அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் உள்ள வலையமைப்பை இப்போது புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'பரை சுத்தா' வெளிநாட்டிலிருந்து காணொளி அழைப்பு மூலம் நேரடியாக இந்த விருந்துக்கு இணைக்கப்பட்டதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
