முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் கைது
முல்லைத்தீவு (Mullaitivu ) தேராவில் பகுதியில் ஐஸ் போதை பொருள் வைத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, புதுக்குடியிருப்பு (Puthukkudiyiruppu) பொலிஸாரால் நேற்றையதினம் (27.112024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேராவில் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குடும்பஸ்தரிடம் இருந்து 1 கிராம் 0.1 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீர் சுற்றிவளைப்பு
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி உதயசாந்த தலைமையில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட, விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் (28) அவரை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெனிசுலாவின் எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றிய பரபரப்பு காட்சிகள்! டிரம்ப் சொன்ன தகவல் News Lankasri
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri