நாட்டில் கொள்கலன்களை கொண்ட போதைப்பொருள் சகாப்தம்!
நாட்டில் தற்போது கொள்கலன்களைக் கொண்ட போதைப்பொருள் சகாப்தம் உறுவாகியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகரகாரியவாசம் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (23.09.2025) உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
போதைப்பொருள் அதிக அளவில்
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக, போதைப்பொருள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்படும் ஒரு சகாப்தத்தை உருவாக்குவதில் தற்போதைய அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.
எங்கள் நாட்டில் எப்போதும் போதைப்பொருள் அச்சுறுத்தல் இருந்து வருகிறது என்பது எங்களுக்குத் தெரியும். இதற்கு முன்பு போதைப்பொருள் அச்சுறுத்தல் இருந்தபோது, அதைக் கட்டுப்படுத்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
அந்த தரப்பு கைது செய்யப்பட்டனர். ஆனால் இதற்கு முன்பு, இந்த நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தல் இருந்தது, கிலோ கணக்கில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, கொள்கலன்களில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படும் ஒரு சகாப்தத்தை உருவாக்குவதில் இந்த அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.
அது மட்டுமல்ல. அந்தக் கொள்கலன்களை விடுவிப்பதற்கு அரசாங்கமே நேரடிப் பொறுப்பைக் கொண்டுள்ளது என்பதும் மிகத் தெளிவாகிறது” என கூறியுள்ளார்.



