நாட்டில் மருந்து விநியோகத்தில் பாரிய நெருக்கடி
நாட்டில் மருந்து விநியோகம் தொடர்பில் பாரிய நெருக்கடி நிலையை எதிர் நோக்கியுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல முன்பதிவுகளையும் இடைநிறுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருந்து விநியோகம்
அத்துடன், குறித்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முன்பதிகளை இரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அனைத்து விசாரணைகளும் நிறைவடையும் வரை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் செலுத்தப்பட வேண்டிய சகல கொடுப்பனவுகளையும் இடைநிறுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பணிப்புரை விடுத்துள்ளார்.