போதைப் பொருளுடன் கைதான நபர் மீது விசாரணை முன்னெடுப்பு
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான ஐஸ் போதைப் பொருள் வியாபாரி மீது மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை பின் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய நபரை சனிக்கிழமை (31) இரவு கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 39 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 3 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்குறித்த சந்தேக நபர் நீண்ட நாட்களாக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
