கல்முனை பகுதியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது
கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட
புலனாய்வு பிரிவினர் சம்பவதினமான இன்று சாய்ந்தமருது பகுதியில் வீதியில்
வைத்து போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குறித்த நபரை சுற்றிவளைத்து மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவரின் உடைமையில் இருந்த 100 மில்லிக்கிராம் ஹெரோயின் மற்றும் 590 போதை குளிசைகள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் எனவும், நீண்ட காலமாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
