பிள்ளையானின் மொழிப்பெயர்ப்பாளரின் கணவர் கைது! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பு நகரில் ஜஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர், மட்டு மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் பிள்ளையானின் மொழி பெயர்பாளரின் கணவர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபரை 3 நாள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்றுமுன்தினம்(8) அனுமதியளித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரம்
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,

பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, ஊழல் ஒழிப்பு மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (07) இரவு முதலியார் வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட போது வியாபாரத்தில் ஈடுபட்ட குறித்த நபரை 5 கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அதிகாரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் தச்சு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூழாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை 250 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்றுமுன்தினம்(8) சனிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது கைது செய்யப்பட்ட வியாபாரியை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் அனுமதித்தார்.
அதனை தொடர்ந்து 250 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட தச்சு தொழிலாளி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri