கொழும்பில் பிரபல போதைப்பொருள் வியாபாரிகளின் சகாக்கள் கைது
கசுன் மற்றும் ரூபன் என்ற பெயர்களில் இயங்கும் பிரபல போதைப்பொருள் வியாபாரிகளுடன் நெருங்கிய சகாக்கள் எனக் கூறப்படும் மூன்று பேர் மட்டக்குளி பகுதியில் வைத்து இன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகள் தீவிரம்
கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி ரணவக்க ஆராச்சிகே அசித்த மதுரங்க பெரேரா என்றழைக்கப்படும் அலிவத்தே அசித என்பவரைக் கொலை செய்யப் பயன்படுத்தியதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது குறித்த மூவரும் மோட்டார் சைக்கிளைப் பாகங்களாகப் பிரித்து விற்பனை செய்வதில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு - 14 பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 4 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri