போதைப்பொருள் வர்த்தகரின் பெண் சகா அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் கைது
ஒரு கிலோவிற்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மாத்தறை கல்ப என்வருடன் தொடர்புடைய இந்நாட்டு போதைப்பொருள் வர்த்தகத்திற்கு தலைமை தாங்கும் குடு தனு என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொடை குடா புத்கமுவ பிரதேசத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இந்த பெண் கைதாகியுள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த சுற்றிவளைப்பில் 01 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு, 12,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
