போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு
போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்றைய தினம் (03) தருமபுர மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் சிறுவர் நன்னடத்தை பிரிவினர் போதைப் பொருள் பாவனையில் ஏற்படக்கூடிய தீமைகள் தொடர்பாகவும் தொலைபேசியினால் ஏற்படும் பாரிய அளவிலான பாதிப்புகள் தொடர்பாகவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது.
கருத்தரங்கு
இதன் போது தர்மபுரம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசநாயக்க தருமபுர மத்திய கல்லூரி அதிபர் இந்திராணி கண்டாவலைப் பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை பிரிவினர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கருத்துக்கள் வழங்கப்பட்டன.



