தமிழர் பகுதியில் உலகில் மிக ஆபத்தான கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்பு!
உலகில் மிக ஆபத்தானதும் அதிகூடிய விலை உள்ளதுமான உயிர்கொல்லி கொக்கேய்ன் போதைப்பொருள் இந்தியாவிலிருந்து மன்னார் மாவட்டத்தின் சிலாபத்துறை ஊடாக கடத்திவர முயற்சித்த ஐவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக் கைது நடவடிக்கை நேற்று (20.10.2022) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறு கடத்திவரப்பட்ட உயிர்கொல்லி கொக்கேய்னில் ஒரு
கிலோ 532 கிராம் மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை சுமார் 5 கோடி ரூபா பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகின்றது.
இரகசியத் தகவல்
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் புத்தளம் நுரைச்சோலை பகுதிக்குத் தேடுதல் நடவடிக்கைக்காக சென்றிருந்த மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் 1 கிலோ 26 கிராம் உயிர்கொல்லி கொக்கேய்ன் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
அறுவர் கைது
கைது செய்யப்பட்டவர்கள் 25, 26, 34, 36 மற்றும் 53 வயதுடையவர்கள் ஆவார். இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக மன்னார் மாவட்டத்தின்
நானாட்டான் பிரதேச செயலர் பிரிவில் 48 வயதுடைய ஒருவரும் கைது
செய்யப்பட்டுள்ளார்.
அவரது வீட்டிலிருந்தும் 506 கிராம் உயிர்கொல்லி கொக்கேய்ன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேறு இடங்களுக்கும் விநியோகம்
இந்தியாவிலிருந்து மன்னாரின் சிலாபத்துறைக்கு கொண்டு வரப்பட்ட உயிர்கொல்லி கொக்கேய்னே அங்கிருந்து வேறு இடங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மன்னார் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் துல்சான் நாகாவத்தவின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே, மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரத்னாயக தலைமையிலான பொலிஸ் குழுவினர் இதனைக் கைப்பற்றியுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள்களான கஞ்சா, ஹெரோய்ன், ஐஸ்
பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவற்றைவிட மிக ஆபத்தான கொக்கேய்ன் இங்கு
மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
