வறட்சியால் சடுதியாகக் குறையும் வவுனிக்குள நீர்மட்டம் – அடுத்த போக நெற்செய்கைக்கு நெருக்கடி
நிலவும் கடுமையான வறட்சி மற்றும் மழையின்மை காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் சடுதியாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
26 அடி கொள்ளளவைக் கொண்ட வவுனிக்குளத்தின் நீர்மட்டம், தற்போதைய வறட்சி மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது.
விவசாயிகள் கவலை
சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகள் நிறைவடையும் தருவாயில் உள்ள போதிலும், இன்னும் சில பகுதிகளில் அறுவடை நடவடிக்கைகள் நிறைவடையவில்லை.
இதேவேளை, மழையின்மை மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக அடுத்த போக நெற்செய்கையையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படக்கூடும் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கத்தால் பெய்த கனமழை காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவையும் எட்டியிருந்தது.
இதனடிப்படையில், இந்த வருட சிறுபோக பயிர்ச்செய்கைக்காக 5,500 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.
வழமையாக கடந்த வருடங்களில் 4,000 முதல் 4,500 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பிலேயே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த வருடம் ஆரம்பத்தில் 5,060 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
நெற்செய்கை
சிறுபோக விதைப்பு காலத்தில் வவுனிக்குளத்தின் நீர்க் கொள்ளளவு மேலும் அதிகரித்ததையடுத்து, மேலதிகமாக 460 ஏக்கர் நிலப்பரப்பிலும் நெற்செய்கை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இதனடிப்படையில், வவுனிக்குளத்தின் முழு விதைப்பு இலக்கான 6,600 ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது சிறுபோக அறுவடை நடவடிக்கைகள் நிறைவடையும் நிலையில், குளத்தின் நீர்மட்டம் வழமையாக 10 முதல் 12 அடியாகக் காணப்பட வேண்டும். எனினும், தற்போதைய வறட்சி மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக, வவுனிக்குளத்தின் நீர்மட்டம் தற்போது 7 அடியாகக் குறைந்துள்ளது.
சிறுபோக அறுவடை நடவடிக்கைகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குள் நிலவும் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் சுமார் 5 அடி 5 அங்குலமாகக் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வவுனிக்குளத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் இந்திரமோகன் சுனோஜ் தெரிவித்துள்ளார்.
இதனால், அடுத்த போக நெற்செய்கையை மேற்கொள்வது தொடர்பில் விவசாயிகள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...