உயர் கல்வி கற்கும் ஆண் மாணவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இலங்கையில் உயர் கல்வி கற்கும் குறிப்பாக பல்கலைக்கழக கட்டமைப்பை பார்க்கும் போது அதில் ஆண் மாணவர்களுக்கு பாரியளவு தட்டுப்பாடு நிலவுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உயர்கல்விக் கட்டமைப்பு வகுப்பறையில் ஆண் பிள்ளைகளை தக்க வைத்துக் கொள்வதில் தோல்வி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ஆண் மாணவர்கள் கல்வியை கைவிடுகின்றார்களா என்பது குறித்து அரசாங்கமும் பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆண் மாணவர்கள் மீது கூடுதல் கவனம்
மாணவர்கள் பரீட்சைகளில் சித்தி அடைவதற்காக மட்டும் பாடசாலை வருவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தலைமைத்துவம், குழுவாக செயல்படும் உணர்வு, வாழ்க்கைக்கு தேவையான பெறுமதிகள் போன்றவற்றை பெற்றுக் கொடுக்கும் முக்கியமான இடமாக பாடசாலையை மாற்ற வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

ஆண் பிள்ளைகள் சமூகத்தில் தவறான நபர்களுடன் இணைந்து கொண்டால், அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகவும் கல்வி கட்டமைப்பிலும் இதற்கான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும், வாழ்க்கை என்பது புத்தகக் கல்வி மட்டுமல்ல என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்- ஆந்திராவில் முதல் தமிழ் திரைப்படம் செய்துள்ள சாதனை... ரஜினியின் ஜெயிலர் 2 செய்த ஆல்டைம் ரெக்கார்ட் Cineulagam
ரூ. 634 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... ஊழல் குறித்து சீரியல் நடிகை ஜனனி அசோக் Cineulagam
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan