தரமற்ற மசகு எண்ணெய் இறக்குமதியால் எரிபொருள் உற்பத்தியில் வீழ்ச்சி
தரமற்ற மசகு எண்ணெய் இறக்குமதி காரணமாக எரிபொருள் உற்பத்தியானது 22 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோரல் எனர்ஜீ எனப்படும் நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய்யின் தரம் தொடர்பில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது.
இதனால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியானது வீழ்ச்சியடைந்துள்ளது.
பெட்ரோலிய வள கூட்டுத்தாபனம் முன்வைத்த கோரிக்கை
டுபாயில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிறுவனத்திடமிருந்து மசகு எண்ணெய் அல்லது எரிபொருள் கொள்வனவு செய்ய வேண்டாம் என பெட்ரோலிய வள கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் விடுத்து வரும் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மசகு எண்ணெய் இறக்குமதி
ஒரு பரலுக்கு 15 டொலர்களும், பீரிமியம் கொடுப்பனவாக 24 டொலர்களும் செலுத்தி மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
99,000 மெற்றிக் தொன் எடையுடைய மசகு எண்ணெயில் உற்பத்தி செய்யப்பட்ட எரிபொருட்களின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



