வாகன போக்குவரத்தினை கண்காணிக்கும் அதிரடி படையின் ட்ரோன் கமராப் பிரிவு
வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியினை இன்று முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ட்ரோன் கமராப் பிரிவு முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தத் தகவலை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரின் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவது, வீதிச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் நோக்கமாகும்.
காலி வீதி, பாராளுமன்ற வீதி, கண்டி - நீர்கொழும்பு வீதிகள் ஆகிய இடங்களை இலக்காகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
ட்ரோன் கமராக்கள் 5 இடங்களில் இருந்து கண்காணிப்புக்களை மேற்கொள்ள இருக்கின்றன என்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான வருண ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan