வளைகுடா பகுதி முழுவதும் உச்சக்கட்ட பதற்றம்! குவைத் விமான நிலையத்தில் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது அடுத்தடுத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில், அங்கிருந்த ரேடார் அமைப்புகள் "கடுமையான" சேதமடைந்துள்ளன.
முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்த போதிலும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதை சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்
இந்த தாக்குதல்கள் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் குவைத் சர்வதேச விமான நிலையம் பல ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளானதாகவும், அதன் ரேடார் அமைப்புக்கு கணிசமான சேதம் ஏற்பட்டதாகவும், அவசரகாலக் குழுக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
வளைகுடாப் பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், குவைத்தின் முதன்மை விமானப் போக்குவரத்து மையத்தின் மீதான இந்த தாக்குதல் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
YOU MAY LIKE THIS VIDEO