சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மோட்டார் போக்குவரத்து துறை திணைக்களத்தில் குவிந்துள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தேக்க நிலையில் உள்ள 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன(Prasanna Kumara Gunasena) தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தில் சேவை
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்தில் இடம்பெற்ற அவசர பரிசோதனை விஜயத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரசன்ன குமார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்தில் சேவைகளை நிகழ்நிலை முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |