விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஓட்டுநர் உரிமம்! வெளியாகியுள்ள எதிர்ப்பு
நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே ஓட்டுநர் உரிமங்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த வழியில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்குவது சுற்றுலாத் துறையில் பணிபுரியும் உள்ளூர் மக்களுக்கும் அவர்களின் வேலைகளுக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா கூறியுள்ளார்.
விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமம்
சில சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கர வண்டிகளை ஒட்டுவதில் அனுபவம் இல்லாததால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமங்கள் வழங்கும் பணி நேற்று (03) ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 20 மணி நேரம் முன்

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri
