சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
முழு செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பான பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் குழுவின் பரிந்துரைகளின் பேரில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னோடித் திட்டம்
2022 ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று அமைச்சரவை தீர்மானத்தின்படி, கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதன்படி, அதன் பெறுபேறுகளுக்கு அமைய இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் பேரில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri