பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பான பிந்திய தகவல்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
கார்டிப் பகுதியில் தனது முன்னாள் மனைவியை குத்திக் கொலை செய்தாக இலங்கையரான கணவன் நீதிமன்றில் ஏற்றுக்கொண்டுள்ளார்.
கடந்தாண்டு இலங்கையை சேர்ந்த 32 வயதான நிரோதா நிவுன்ஹெல்ல படுகொலை செய்யப்பட்ட நிலையில் வீதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
இறுதித் தீர்ப்பு
இந்நிலையில் கொலையுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட முன்னாள் கணவனான 37 வயதான திசார வேரகலகே குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற நிலையில், தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி டேனியல் வில்லியம்ஸ் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அவருக்கான இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
உடலில் காயங்கள்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி காலை வேளையில், South Morgan Place என்ற பகுதியில் இரத்த வெள்ளத்தில் இரண்டு கார்களுக்கு இடையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர். இதன்போது அவரது உடலில் பல இடங்களில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்ததாகக் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.