சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்
ஒரு நாள் சேவையின் கீழ் 50 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் கொள்ளளவை ஈடுசெய்யும் வகையில் 5 இலட்சம் அட்டைகள் கிடைத்துள்ளதாகவும் கடந்த திங்கட்கிழமை (14.11.2022) முதல் அட்டைகளை அச்சிட ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 இலட்சம் தற்காலிக அனுமதிப் பத்திரம்

இந்த தகவலை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“திணைக்களத்தினால் வழங்கப்பட வேண்டிய 6 இலட்சம் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான அட்டைகளை வழங்கும் இலக்கை அடையும் வரை மேற்குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 1,700 அட்டைகளை அச்சிடும் திறன் திணைக்களத்துக்கு உள்ளதால், ஒரு நாள் சேவையில் 50 அட்டைகளையும் 1650 அட்டைகளை 6 இலட்சம் தற்காலிக அனுமதிப் பத்திரம் பெற்றவர்களுக்காகவும் அச்சிடவுள்ளது.”என தெரிவித்துள்ளார்.
புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ Cineulagam
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan