கொழும்பில் ஆயிரக்கணக்கான சாரதிகளுக்கு அபராதம்: வெளியான காரணம்
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதை விதிகளை மீறுதல், போக்குவரத்து சமிக்ஞைகளை கடைபிடிக்காமல் இருத்தல், தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகளில் சிவப்பு விளக்குகளை மீறி வாகனம் செலுத்துதல் போன்ற போக்குவரத்து விதிகளை சாரதிகள் மீறிச்செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, கொழும்பு நகரில் சிசிடிவி கமரா மூலம் அடையாளம் காணப்பட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 4,500க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன்,போக்குவரத்து திணைக்களத்தின் சிசிடிவி கமராக்கள் மூலம் பெறப்பட்ட காணொளி ஆதாரம் பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசேட வேலைத்திட்டம்
மேலும்,கொழும்பு மாநகரில் பொருத்தப்பட்டுள்ள 106 சிசிடிவி கமராக்கள் மூலம் பொரளை, நாரஹேன்பிட்டி உள்ளிட்ட 33 பிரதான சந்திகளில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
மஞ்சள் கோடுகளுக்கு நடுவில், தேவையற்ற சாலைக் கடப்புகள் காணப்படுவதும் இதன்மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |